இராஜினாமா செய்ததன் காரணம் என்ன? விளக்குகிறார் ஹபீஸ்

0
530

தனிப்பட்ட காரணங்களுக்காகவே தான் பதவியை இராஜினாமா செய்ததாக, ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் தெரிவித்துள்ளார்.

சில மாவட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் இல்லாமையால், அந்தப் பகுதிகளிலுள்ளவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கும் பொருட்டே தான் சொந்த விருப்பத்தின் பேரில் இராஜினாமா செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தனது பதவி விலகல் கடிதத்தை அவர் நேற்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருந்த, ஏ.ஆர்.ஏ. ஹபீஸ், அமைச்சர் ரவூப் ஹக்கீமின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இவரது இராஜினாமாவினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு, கிழக்கு மாகாணத்தில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில், கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

(அத தெரண)

LEAVE A REPLY