எரிபொருள் விலை சூத்திரம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிப்பு

0
250

மசகு எண்ணெய் விலைச் சூத்திரம், அமைச்சரவை அனுமதிக்காக இன்று (20) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சின் பரிந்துரைகள் உள்வாங்கப்பட்டு இந்த விலைச் சூத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

உலக சந்தையில் காணப்படும் மசகு எண்ணெய் விலை, சூத்திரத்தில் தாக்கம் செலுத்தும் விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து இந்த சூத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

எரிபொருள் கூட்டுத்தாபனத்தில் தற்போதைய நிலைமை மற்றும் அதன் சாதக தன்மைகள் தொடர்பில் நிதி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளும் கவனத்திற்கொள்ளப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

விலைச்சூத்திரம் தொடர்பில் கொள்கை ரீதியில் தீர்மானத்திற்கு வர முடியும் எனவும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

(NF)

LEAVE A REPLY