கச்சா எண்ணெய் விலை மேலும் குறைய வாய்ப்பு: சர்வதேச எரிசக்தி நிறுவனம் தகவல்

0
210

கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத வகையில் சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில், ஈரான் மீதான பொருளாதார தடை நீக்கப்பட்டு வருவதையடுத்து, அந்நாடு கச்சா எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளைக்கு 5 லட்சம் பேரல்களாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

தேவைக்கு அதிகமாக உற்பத்தி இருப்பதால் ஓவர்-சப்ளை காரணமாக கச்சா எண்ணெய் விலை மேலும் குறைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக சர்வதேச எரிசக்தி நிறுவனம் தனது மாதாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தற்போது கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில் ஒரு பேரலுக்கு 29 டாலருக்கும் குறைவாகவே வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY