ஈராக்கில் 2 ஆண்டுகளுக்குள் 18800 பொதுமக்கள் உயிரிழப்பு: ஐ.நா. அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

0
168

ஈராக்கில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் மற்றும் வன்முறைகள் தொடர்பாக ஐ.நா. புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2014 ஜனவரி 1-ம் தேதியில் இருந்து 2015-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி வரையில் சுமார் 18,802 பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்த காலகட்டத்தில் மொத்த உயிரிழப்புகள் 55 ஆயிரத்திற்கும் அதிகம் என்றும், 36,245 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா.வின் புதிய அறிக்கையின்படி மேற்குறிப்பிட்ட காலகட்டங்களில் சுமார் 3.2 மில்லியன் மக்கள் இருக்க இடமற்று உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்திவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பொதுமக்களை, பிணைகைதிகளாக பிடித்து வைத்து கொடூரமான முறையில் கொலை செய்து வருகின்றனர். ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் திட்டமிட்டு பரவலான வன்முறையை செய்துவருகிறது என்றும் ஐ.நா. குற்றம் சாட்டி உள்ளது.

LEAVE A REPLY