உலகிலேயே வயதான மனிதர்: ஜப்பானில் மரணம்

0
171

உலகிலேயே அதிக வயதுடைய மனிதர் என கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற ஜப்பானை சேர்ந்த யசுடாரோ கோய்டே காலமானார்.

இதே ஜப்பான் நாட்டில் வாழ்ந்து வந்த சகாரி மொமாய் கடந்த ஆகஸ்ட் மாதம் காலமானதையடுத்து, கோய்டே உலகிலேயே அதிக வயதனாவர் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

தையல் தொழிலாளியான கோய்டே, இதயம் செயல் இழந்ததால் இறந்ததாக மருத்துவர்கள் கூறினார்.

இன்னும் இரு மாதங்களில் 113-வது பிறந்த நாளை கொண்டாடவிருந்த கொய்டே வாழ்நாள் முழுவதும், புகை மற்றும் மது பழக்கங்கள் இல்லாமல் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வந்ததாக உறவினர் ஒருவர் கூறினார்.

LEAVE A REPLY