ஜூன் மாதம் மாகாணசபை தேர்தல் நடைபெறுவது உறுதி

0
265

மாகாணசபை தேர்தலை எந்த காரணம் கொண்டும் பிற்போடப்படாது. எதிர்வரும் ஜூன் மாதம் தேர்தலை ஜனாதிபதி ஆலோசனை வழங்குகியுள்ளார் என்று தொழிலாளர் மற்றும் கைத்தொழில் அலுவல்கள் அமைச்சர் டப்ளியு. டி. ஜே செனவிரத்ன தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கூட்டு எதிர்கட்சியில் உள்ளூராட்சி தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர். அது சட்டவிரோதமானது. ஜனநாயகத்துக்கு எதிரானது. தேர்தலை பிற்போட எவ்வித தேவையும் எங்களுக்கில்லை. யாருடைய தேவைக்கும் பிற்போடப்படவில்லை. உள்ளூராட்சித் தேர்தலை புதிய தேர்தல் முறைியல் நடத்த எதிர்பார்க்கிறோம். உள்ளூராட்சி தேர்தல் முழுமையாக தொகுதிவாரியாக நடத்தப்படும். 25 வீதமான பெண்கள் பங்களிப்பை ஊக்குவிக்கிறோம்.

இதுதொடர்பில் மீண்டும் ஆய்வு செய்வதற்காகவே பிற்போடப்படவேண்டிய தேவை ஏற்பட்டது. வேறெந்த காரணமுமில்லை. தேர்தல் தொகுதி தீர்மானிக்கப்பட்டதன் பின்னர் ஏப்ரல் 5ஆம் முன்னர் மாற்றம் செய்து வர்த்தமானியில் வௌியிட ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். ஜூன் மாதம் உள்ளூராட்சித் தேர்தல் உறுதியாக நடத்த உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

இவ்வூடகவியலாளர் சந்திப்பில் மீன்பிடி, நீர்வள அபிவிருத்தி அமை்சசர் மஹிந்த அமரவீர மற்றும் முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY