சார்ஜாவில் அதிவேகமாக காரில் சென்ற வாலிபர் சாலை விபத்தில் பலி

0
210

ஐக்கிய அமீரக நாடுகளில் ஒன்றான சார்ஜாவில் அதிவேகமாக காரில் சென்ற 22 வயது வாலிபர் எதிரேவந்த கார்மோதி உயிரிழந்தார்.

சார்ஜா-கல்பா சாலையில் நிகழ்ந்த இந்த விபத்து தொடர்பான தகவல் அறிந்ததும் விரைந்துவந்த போலீசார் விபத்துக்குள்ளான சொகுசு காரில் காயமடைந்து கிடந்த இருவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர்களில் 22 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உயிர் ஏற்கனவே பிரிந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இன்னொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY