யுவராஜ் சிங்கின் சாதனையை சமன் செய்த கிறிஸ் கெய்ல்!

0
285

பிக் பாஷ் டி20 லீக் தொடரின் நேற்றைய போட்டியில் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் புதிய சாதனை படைத்துள்ளார். பிக் பாஷ் டி20 லீக் தொடர் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடந்த போட்டியில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ்- மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் மெல்போர்ன் அணி அதிக ஓட்டங்கள் விகிதம் எடுத்தால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமை இருந்தது.

இந்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 170 ஓட்டங்கள் குவி்த்தது.

இதனால் அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமென்றால் மெல்போர்ன் அணி 15.1 ஓவரில் 171 ஓட்டங்கள் குவிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்த நிலைமையில் மெல்போர்ன் அணிக்கு தொடக்க வீரர்களாக கெய்ல் மற்றம் கூப்பர் களமிறங்கினார்கள்.

முதல் ஓவரை வெஸ்ட் வீசினார். இந்த ஓவரின் கடைசி 4 பந்துகளை கெய்ல் சிக்சருக்கு அனுப்பினார்.

பின்னர் 3வது ஓவரை லாப்லின் வீசினார். இந்த ஓவரின் 2வது பந்தையும் அதற்கு அடுத்த பந்தையும் சிக்சருக்கு விளாசினார்.

அதே போல் 4வது ஓவரின் முதல் பந்தில் மேலும் ஒரு சிக்ஸ் விளாசி கெய்ல் 12 பந்தில் 51 ஓட்டங்கள் (1 பவுண்டரி 7 சிக்சர்கள்) அடித்தார்.

இதன்மூலம் அதிகவேகமாக அரைசதம் அடித்து இந்திய வீரர் யுவராஜ் சிங்கின் சாதனையை அவர் சமன் செய்தார்.

இந்தப் போட்டியில் தொடர்ந்து விளையாடிய கெய்ல் 17 பந்தில் 56 ஓட்டங்கள் (2 பவுண்டரிகள், 7 சிக்சர்கள்) குவித்து ஆட்டமிழந்தார்.

கெய்ல் அதிரடி காட்டினாலும் அந்த அணி 15.3 ஓவரிலேயே 143 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் அரையிறுதி வாய்ப்பையும் இழந்தது.

LEAVE A REPLY