சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களோடு சாரதிகளும் கைது!

0
104

மட்டக்களப்பு, சித்தாண்டி சந்தன மடு ஆற்றிலிருந்து சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து நகரப் பகுதிக்கு எடுத்துச் சென்றார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் திங்கள் இரவு மூன்று இயந்திரங்கள் மணல் ஏற்றப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டதோடு அதன் சாரதிகள் மூவரையும் கைது செய்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

பொது மக்களிடமிருந்து தகவல் கிடைக்கப் பெற்றதின் அடிப்படையில் மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புக்கமைவாக ஸ்தலத்திற்கு நேரடியாக விஜயம் செய்த மட்டக்களப்பு பொலிஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

கைப்பற்றப்பட்ட மணல் ஏற்றிய உழவு இயந்திரங்கள் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பக மட்டக்களப்பு மற்றும் ஏறாவூர் பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அப்துல்லாஹ்

LEAVE A REPLY