மின்­ கட்­ட­ணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது: ரஞ்சித் சியம்­ப­லா­பிட்­டிய

0
265

மின்­சார கட்­ட­ணங்கள் அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது என பரப்­பப்­படும் வதந்­தியில் எவ்­வித உண்­மை­யு­மில்லை. மின்­சார கட்­ட­ணங்கள் அதி­க­ரிக்­கப்­ப­ட­மாட்­டாது என மின் வலு மற்றும் மீள் புத்­தாக்­க­சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்­ப­லா­பிட்­டிய தெரி­வித்தார்.

மின்­வலு மற்றும் மீள் புத்­தாக்க சக்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய அமைச்சர் ரஞ்சித் சியம்­ப­லா­பிட்­டி­ய­விடம் ஊட­க­வி­ய­லாளர் கேட்ட கேள்­விக்குப் பதி­ல­ளிக்­கை­யிலே மேற்­கண்­ட­வாறு கூறினார்.

தொடர்ந்தும் அவர் பதி­ல­ளிக்­கையில், அமைச்சு மின்­வலு உற்­பத்திச் செல­வு­களைக் குறைப்­ப­தற்கும் மக்கள் மீள்­புத்­தாக்க சக்­தி­களைப் பயன்­ப­டுத்­து­வதை ஊக்­கு­விப்­ப­தற்கும் திட்­டங்கள் வகுத்­துள்­ளது.

சூரிய வெளிச்சம் மூலம் தமது வீடு­களில் மின் வலுவைப் பெற்றுக் கொள்­வ­தற்கும் விறகு பாவ­னையை ஊக்­கு­விப்­ப­தற்கும் விழிப்­பு­ணர்வு ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.

எதிர்­வரும் ஏப்ரல் மாதம் சிங்­கள தமிழ் புத்­தாண்­டுக்கு முன்பு நாட்டில் மின்­சார வச­தி­யற்ற மின்­சார வசதி தேவை எனக்­கோரும் அனைத்து வீடு­க­ளுக்கும் மின் இணைப்பு வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

மின் இணைப்பை பெற்றுக் கொள்­வ­தற்­காக 40 ஆயிரம் ரூபா­வுக்கும் குறைந்த கட­னு­தவி வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

ஆறு வருட காலத்தில் இதனை திருப்பிச் செலுத்த வேண்டும்.

மின் இணைப்பு பெற்­றுக்­கொள்­வ­தற்­காக வீடுகள் அமைந்­துள்ள காணி­க­ளுக்கு காணி­உ­று­திகள் இருக்க வேண்டும் என்­பதே நடை­மு­றையில் இருந்­தது. இதனை கிராம உத்­தி­யோ­கத்­தர்கள் உறு­திப்­ப­டுத்த வேண்டும்.

மின்­சார சபை இப்­போது வீடு இருப்­பதை மாத்­திரம் கிராம உத்­தி­யோ­கத்­தர்கள் உறு­தி­செய்தால் போதும்.

மின் இணைப்பு வழங்­கலாம் என தீர்­மா­னித்­துள்­ளது. மீள் புத்­தாக்க சக்தி (வலு) வை ஊக்­கு­விப்­பதன் மூலம் சூழலும் பாது­காக்­கப்­ப­டு­கி­றது.

சூழல் மாசு­ப­டு­வது தவிர்க்­கப்­ப­டு­கி­றது என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் கருத்து வெளி­யிட்­டுள்­ள­துடன் இதனை ஊக்­கு­விக்­கும்­ப­டியும் கோரியுள்ளார்.

பல குக்கிராம மக்கள் மின்சார பாவனை தொடர்பான அறிவில்லாமல் இருக்கிறார்கள். இவர்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்காக ஆங்காங்கு மின் சங்கங்கள் அமைக்கப்படவுள்ளன என்றார்.

-Vidivelli-

LEAVE A REPLY