தென்கிழக்கு பல்கலை விரிவுரையாளரின் நூல் ஜெர்மனியில் வெளியீடு

0
295

இலங்கை தென்கிழக்கு பல்கலையின் இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தைசேர்ந்த தகவல் தொழிநுட்ப விரிவுரையாளர், எழுத்தாளர் எப்.எச்.ஏ. ஷிப்லி அவர்களும், இலங்கை தகவல் தொழிநுட்ப நிறுவக (SLIIT) சிரேஷ்ட விரிவுரையாளர், தகவல் முகாமைப்பொறியியல், துறைத்தலைவர் எஸ். சமந்த தெலிஜ்ஜகொட அவர்களும் இணைந்து எழுதிய “இலத்திரனியல் கழிவு முகாமைத்துவ முறைமைகள்” (Electronic Waste Management System) எனும் ஆங்கில மொழி மூல நூலானது ஜெர்மனி யின் முன்னணி வெளியீட்டு நிறுவனமான Lambert Academic Publishing அமைப்பினால் அண்மையில் ஜெர்மனி யில் வெளியிடப்பட்டுள்ளது.

உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் இலத்திரனியல் கழிவுகள் பற்றிய முறையான கழிவு முகாமைத்துவம், மீள்சுழற்சி உபாயங்கள், இலத்திரனியல் கழிவுகளின் உடல், உள அபாயங்கள் போன்ற முக்கியமான உள்ளடக்கங்களை தன்னகத்தே கொண்டுள்ள இந்த நூலினை உலகின் முன்னணி நூல் விற்பனை இணையத்தளங்களில் விரைவில் கொள்வனவு செய்யவோ, பார்வையிடவோ முடியும் (www.amazon.com & www.morebooks.de உட்பட).

அத்தோடு நூல் விமர்சனங்களை எழுதுகின்ற ஊடகவியலாளர்கள், பத்திரிகை ஸ்தாபனங்கள் info@lap-publishing.com எனும் மின்னஞ்சலுக்கு விண்ணப்பிப்பதன் மூலம் நூலின் Digital பிரதியை இலவசமாக பெற்றுக்கொள்ளவும் முடியும் என பதிப்பாளர்கள் தங்களது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

மேற்படி நூலாசிரியர்கள் அண்மையில் ஆசியாக்கண்டத்தின் மிகச்சிறந்த தகவல் தொழிநுட்ப கருத்திட்டங்களுக்கான போட்டியொன்றில் பரிசு வென்றவர்கள் என்பதும், இலத்திரனியல் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் பன்னாட்டு ஆய்வரங்குகளில் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்து பாராட்டுப்பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சப்னி

LEAVE A REPLY