கோஹ்லி சொல்லியது போல் சதம் அடித்து விட்டார்: வாசிம் அக்ரம்

0
290

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கோஹ்லி சொல்லியது போல் சதம் அடித்து காட்டி விட்டதாக முன்னாள் பாகிஸ்தான் அணித்தலைவர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
பெர்த்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணியின் துணைத்தலைவர் கோஹ்லி 91 ஓட்டங்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும், வேகப்பந்து வீச்சாளருமான வாசிம் அக்ரம் வர்ணனையாளராக இருந்தார்.

அப்போது போட்டி முடிந்த பின்ன்னர் கோஹ்லியிடம், ”நீங்கள் சதத்தை தவற விட்டுவிட்டீர்கள், அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விட்டது” என்றார்.

இதற்கு பதிலளித்த கோஹ்லி ‘‘வாசிம் பாய், நான் சொல்வதை கேளுங்கள், இந்த தொடரில் நான் கண்டிப்பாக இரண்டு சதங்கள் விளாசுவேன்” என்று அவருக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார்.

பிரிஸ்பேனில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் 59 ஓட்டங்களில் ஆட்டமிழந்தாலும், நேற்று மெல்போர்னில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் சதம் விளாசினார்.

இதன்படி பாதி வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாகவும், மீதமுள்ள ஒரு சதத்தையும் அவர் அடிப்பார் எனவும் வாசிம் அக்ரம் நினைவு கூர்ந்து பேசியுள்ளார்.

3வது ஒருநாள் போட்டியில் தனது 24வது சதத்தை விளாசிய கோஹ்லி, அதிவேக 7000 ஓட்டங்களை குவித்து சாதனை படைத்தார்.

LEAVE A REPLY