பிரிட்டனில் முஸ்லிம் பெண்கள் ஆங்கிலம் கற்க கூடுதல் நிதி

0
198

பிரிட்டனில் வாழும் முஸ்லிம் பெண்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதற்காக 28 மில்லியன் டாலருக்கும் அதிக நிதியை பிரிட்டிஷ் அரசாங்கம் ஒதுக்கவுள்ளது.

தீவிரவாதத்தை எதிர்கொள்ளவும், மேலும் ஒத்திசைவான சமூகம் ஒன்றை உருவாக்கவும் அரசாங்கத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.

ஆங்கிலம் ஓரளவே தெரிந்த அல்லது ஆங்கிலமே தெரியாத ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்களை, சில முஸ்லிம் ஆண்கள் பிற்போக்குத் தனமான அணுகுமுறையுடன் நடத்துவதாகவும், அந்த பெண்களை மோசமான விதத்தில் கட்டுப்படுத்துவதாகவும் தி டைம்ஸ் நாளிதழிலில் வெளியாகிய தனது குறிப்பில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் தனது தாராளவாத விழுமியங்களை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் வாழ்க்கைத் துணைக்கான வீசாவில் வரும் பெண்கள், இனி பிரிட்டனிலேயே தொடர்ந்தும் இருக்க விண்ணப்பிக்கும் போதும், பிரிட்டன் குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போதும், ஆங்கில மொழி சோதனையை கட்டாயம் எதிர்கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY