துர்க்மெனிஸ்தானில் சிகரெட்–புகையிலைக்கு தடை

0
228

துர்க்மெனிஸ்தானில் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் புற்றுநோய் அபாயம் உள்ளது. எனவே, சிகரெட் மற்றும் புகையிலைக்கு பல நாடுகள் தடை விதித்துள்ளன.

தற்போது சோவியத் ரஷியாவில் இருந்து பிரிந்த துர்க்மெனிஸ்தானும், கடைகளில் சிகரெட் மற்றும் புகையிலை விற்க தடை விதித்துள்ளது.

இச்சட்டம் கடுமையாக பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி விற்றால் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த கடுமையான சட்டத்தால் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் விற்பனை கள்ளச் சந்தையில் மிக ஜோராக நடைபெறுகிறது.

LEAVE A REPLY