பாகிஸ்தானின் சிறந்த உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்தும் கண்காட்சி!

0
264

பாகிஸ்தான் நாட்டின் வர்த்தகத்தினை உலகிற்கு எடுத்துக் காட்டும் வகையிலும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவினை மேலும் பலப்படுத்துமுகமாக 15.01.2016 வெள்ளிகிழமை மாலை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க சாலையில் பாகிஸ்தானின் சிறந்த உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்தும் கண்காட்சியானது உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது .

இக்கண்காட்சியில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்குமிடையிலான வர்த்தக உறவானது இவ்வாறான நிகழ்வுகள் மூலம் பலமடைவதுடன் அதே நேரத்தில் எமது நாட்டின் பல்வேறு வளங்களை கொண்டுள்ள கிழக்கு மாகாணத்தில் அவர்களது உற்பத்திக்கான முதலீடுகளை செய்வதற்கும் முன்வரவேண்டும் எனவும், இம்மாதம் 28 ஆம் திகதி இடம்பெறவுள்ள கிழக்கின் முதலீடு எனும் சர்வதேச அரங்கு பற்றியும் பாகிஸ்தான் தொழிலதிபர்களுக்கு தெரிவித்தார் .

அஷ்ரப் சமத்

44b0031f-6c46-451a-b6e8-752c3d67ada1 46d416cd-9588-4192-90b3-61d5a300c948 121ed75d-9a75-4b3a-a3ce-ba80ad14ab48 411b6046-eae0-4d4d-b77f-f4448ba18a22 2662a8e3-fac8-4c2b-99ed-243767adb155 d3b98e5e-3620-4208-bd16-09cd0954bc26

LEAVE A REPLY