சட்ட விரோதமாக சாராயம் எடுத்துச் சென்றவர் கைது!

0
217

கல்முனை பொலிஸ் பிரிவிலுள்ள துறைநீலாவணையில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் சட்ட விரோதமாக சாராயம் எடுத்துச் சென்றார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (17) ஞாயிறு இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

துறைநீலாவணை 6ஆம் வட்டாரம் நெசவு நிலைய வீதியைச் சேர்ந்த மாணிக்கம் திருச்செல்வம் (வயது 48) என்பவர் 12 போத்தல் சாராயத்தை சைக்கிளில் எடுத்துச் சென்றபோது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்ட புலனாய்வு தலைமைப் பொறுப்பதிகாரி அப்துல் அமீரின் உத்தரவுக்கமைவாக உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.ஐ. சரத்சந்திர தலைமையிலான பொலிஸ் அணியினர் இந்த நடிவக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இச்சம்பவம் பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

(அப்துல்லாஹ்)

LEAVE A REPLY