2வது டி20 போட்டியில் பாகிஸ்தானை பந்தாடியது நியூசிலாந்து

0
319

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இதில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் 2வது போட்டி இன்று ஹாமில்டனில் நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதன்படி பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்கள் குவித்தது.

உமர் அக்மல் அதிகபட்சமாக 43 பந்தில் 56 ஓட்டங்கள் எடுத்தார். சோயிப் மாலிக் 39 ஓட்டங்கள் சேர்த்தார்.

பின்னர் 169 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு குப்தில், வில்லியம்சன் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

இருவரும் பாகிஸ்தான் பந்து வீச்சை விளாசி தள்ளினர். குப்தில் சிக்சர்களாக பறக்க விட, வில்லியம்சன் பவுண்டரிகளாக விளாசினார்.

இதனால் நியூசிலாந்து அணி 17.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 171 ஓட்டங்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

குப்தில் 58 பந்தில் 87 ஓட்டங்களும் (9 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்), வில்லியம்சன் 48 பந்தில் 11 பவுண்டரிகளுடன் 72 ஓட்டங்களும் குவித்தனர்.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 3வது மற்றும் கடைசி டி20 போட்டி எதிர்வரும் 22ம் திகதி வெலிங்டனில் நடைபெறுகிறது.

LEAVE A REPLY