திய அரசியலமைப்பு- கருத்துக்கணிப்பு இன்று ஆரம்பம்

0
224

புதிய அரசியலமைப்பு தொடர்பில் பொதுமக்கள் கருத்துக்களை அறியும் நடவடிக்கை இன்று (18) ஆரம்பமாகவுள்ளது. முதற்கட்டமாக கொழும்பு மாவட்ட மக்களின் கருத்துக்களை அறியும் பணி இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பு 2இல் அமைந்துள்ள விசும்பாய கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தில் மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம் என்று அக்குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜயநாயக்க தெரிவித்துள்ளார்.

20 பேரைக்கொண்ட இக்குழு நான்கு பேரை கொண்ட 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு, மாவட்டரீதியில் கருத்துக்கள் அறியும் அமர்வுகளை மேற்கொள்ளவுள்ளன.

இக்குழு இம்மாதம் 31ஆம் திகதி வரையில் கருத்துக்கணிப்பில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY