ஈரானை சேர்ந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தடை: அமெரிக்கா நடவடிக்கை!

0
286

ஈரான் நடுத்தர அளவிலான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்த உதவியதற்காக அந்த நாட்டை சேர்ந்த 11 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளது அமெரிக்கா.

கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஈரான் நடுத்தர அளவிலான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தியதாக அமெரிக்காவின் உளவுத்துறை தெரிவித்துள்ளது.

ஈரான் அணுஆயுதத்தை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக வெளியான புகார்களை அடுத்து அந்நாட்டின் மீது பொருளாதார ரீதியாகவும் வேறு பல வழிகளிலும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தடைகள் விதித்தது. இந்த தடைகள் நேற்று விலக்கிக் கொள்ளபட்ட நிலையில் மீண்டும் புதிய தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY