ஈரானிடமிருந்து மசகு எண்ணெயை இறக்குமதி செய்வது குறித்து இலங்கை பரிசீலனை

0
205

ஈரானிடமிருந்து மசகு எண்ணெயை மீண்டும் இறக்குமதி செய்வது தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வாயுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சு உறுப்பினர்களிடம் கலந்துரையாடுவதக அமைச்சர் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் அகற்றப்பட்டதையிட்டு மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ள அமைச்சர், ஈரான் மீதான தடைகள் காரணமாக அண்மைக்காலமாக மசகு எண்ணெயை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனால் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கியதாகவும், பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வாயுத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் தற்போது உலக சந்தையில் மசகு எண்ணெய் விற்பனை செய்யப்படும் விலைக்கு அமைவாக, ஈரானிடமிருந்து குறைந்த விலையில் எண்ணெய் பெற்றுக் கொள்ளமுடியுமாயின் அது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் மசகு எண்ணெய்க்கான விலைச்சுட்டெண் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

குறைந்த விலையில் எண்ணெய் இறக்குமதி செய்வதால் , அதன்மூலம் கிடைக்கும் இலாபத்தை நாட்டு மக்களுக்கு வழங்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

(NF)

LEAVE A REPLY