குளிர் காலத்தில் பக்கவாதம் மாரடைப்புக்கு வாய்ப்பு அதிகம்!

0
130

சாதாரண நேரங்களை காட்டிலும் குளிர் காலங்களில் மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில், வெப்பத்துடன் கூடிய தட்பவெட்ப நிலையே அதிக காலங்கள் நீடிக்கிறது. ஆனால் குளிர்காலம் வரும் போது இந்தியர்களின் உடல் தட்பவெட்ப நிலைக்கு ஏற்றவாறு மாறும் போது நோய்கள் பாதிக்கும் அபாயங்கள் இருந்துவருகிறது. ஆனால் இதற்கான காரணிகள் குறித்து ஏராளமானவர்களுக்கு தெரிய வாய்ப்புகள் இல்லை.

பொதுவாக குளிர்காலங்களில் மனித உடலில் உள்ள ரத்தக்குழாய்கள் குளுமை காரணமாக சுருங்கிவிடும். இதனால் இதயம் அதிக செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். குளிர்காலத்தில் காற்றில் உள்ள பிராணவாயுவின் அளவு, குறைந்து காணப்படும். இதனால் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள், தட்டை அணுக்கள் மற்றும் பைபர்நோஜன் மூலக்கூறு ஆகியவை அதிகரிக்கும். இதனால் மற்ற காலங்களை காட்டிலும் குளிர்காலத்தில் மனித உடலில் உள்ள கொலஸ்ட்ராலும் அதிகரிக்கிறது. இதனால் வழக்கத்திற்கு மாறாக ரத்தம் உறையத்தொடங்கி, மூளை மற்றும் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் குறையும்.

ரத்தக்குழாயும் சுருங்கி, ரத்த ஓட்டமும் குறைவதன் விளைவாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்தியாவில் மலைப்பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு மற்ற பிரதேசங்களில் வசிப்பவர்களை காட்டிலும் 50 சதவீதம் அதிகம் உள்ளது. இதை எப்படி நாம் தெரிந்துகொள்வது என்ற சந்தேகம் எழலாம். குளிர்காலத்தில் மார்பில் அழுத்தம் ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்பட்டால், அதுதான் ரத்த ஓட்டம் குறைந்ததற்கான முதல் அறிகுறி.

குளிர்காலத்தில் ரத்தத்தின் அடர்த்தி அதிகரிப்பதால், இதயத்துடிப்பு அதிகரித்து, ரத்தக்கொதிப்பு ஏற்படும். இது போன்ற பாதிப்பு வயதானவர்களுக்கு அதிகம் ஏற்படும். மேலும் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் இந்த பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மனித உடலில் உள்ள வெப்பம் 80 பாரன்ஹீட்டுக்கு குறையும் போது விளைவுகள் விபரீதமாக இருக்கும். உடல் நடுக்கம் தொடங்கி, மயக்கநிலை, மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவை ஏற்படும்.

பாதிப்பை தவிர்க்கும் வழிமுறைகள்:

குளர்காலத்தில் உடல் வெப்பநிலையை சீராக வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். குறிப்பாக குளிர்காலங்களில் பெரும்பாலானவர்கள் வெந்நீரில் குளிக்கும் பழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர். இது மிகவும் ஆபத்தானதாகும். வெந்நீரில் குளிக்கும் போது அதில் உள்ள வெப்பம், மனிதன் உடலின் ரத்தக்குழாய்களை விரிவடைய செய்கிறது. குளித்து முடித்து வெளியில் வரும்போது உடல் குளிர்விக்கப்படுவதால் ரத்தக்குழாய்கள் உனடியாக சுருங்கும். இதனால் இதயத்தில் ரத்த அழுத்தம் அதிகரித்து மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உருவாகிறது. முடிந்த வரை தலையில் கம்பளியால் ஆன குல்லா, தடிமனான உடைகள் ஆகியவற்றை அணிவதன் மூலம் உடலை வெப்பமாக வைத்திருக்க முடியும்.

மது அருந்துபவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுவது இந்தியாவில் அதிகம் உள்ளது. காரணம் குளிர்காலங்களில் மது அருந்தும் போது, ரத்தகுழாய்கள் வெப்பத்தால் விரிவடைகிறது. பின்னர் போதையில் வெளியில் சுற்றித்திரியும் போது உடல் உஷ்ணம் வேகமாக குறைந்து ஆபத்தை ஏற்படுத்துகிறது. தென்னிந்திய மாநிலங்களில் மார்கழி மற்றும் தை மாதங்களில் இந்த பாதிப்புகள் அதிகம் ஏற்படுகிறது. மற்ற நேரங்களை காட்டிலும் குளிர்காலங்களில் அதிகம் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் உஷ்ணத்தை கட்டுப்பாட்டில் வைத்து, மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதை தடுக்கலாம்.

LEAVE A REPLY