திருச்சி ஏர்போட்டில் Sri Lankan Airlines ஆல் பரபரப்பு!

0
521

திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கிய போது விமானத்தின் சக்கரம் செயலிழந்தது. எனினும் சாமர்த்தியமாக பைலட் விமானத்தை தரையிறக்கியதால் அதில் இருந்த 128 பயணிகள் உயிர் தப்பினர்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில் கொழும்பிலிருந்து திருச்சிக்கு தினமும் பிற்பகல் 3.05 மணிக்கு லங்கன் விமானம் வந்து, 4.05 மணிக்கு மீண்டும் கொழும்பு புறப்பட்டு செல்லும்.

வழக்கம் போல் இந்த விமானம் நேற்று முன் தினம் பிற்பகல் 3.05 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு வந்தது. விமானத்தை தரையிறக்க கட்டுப் பாட்டு அறையிலிருந்து சிக்னல் வந்தது. ஆனால் திடீரென விமானத்தின் முன்புற சக்கரம் சுற்றாமல் செயலிழந்ததால் விமானத்தை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இது குறித்து விமானத்தின் பைலட் கட்டுப் பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், விமானத்தை தள்ள பயன்படும் புஷ் பேக் வாகனங்கள் வரவழைக்கப் பட்டு தயார் நிலையில் நிறுத்தப் பட்டதால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பைலட் சாமர்த்தியமாக விமானத்தை தரையிறக்கி பிரேக் போட்டதால் விமானம் பாதுகாப்பாக ஓடுதளத்தில் நின்றது. இதனால் விமானத்தில் இருந்த 128 பயணிகள் உயிர் தப்பினர். பைலட்டின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்திலிருந்து விமானம் தப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY