அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அபார சதம்: டிவில்லியர்சின் உலகசாதனையை முறியடித்த கோஹ்லி

0
254

இந்திய கிரிக்கெட் அணியின் துணைத்தலைவர் விராட் கோஹ்லி அதிவேகமாக 7,000 ஓட்டங்கள் கடந்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். இந்தியா- அவுஸ்திரேலிய அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்று வருகிறது.

இதில் விராட் கோஹ்லி 78 ஓட்டங்களை கடந்த போது குறைந்த இன்னிங்சில் 7,000 ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இதற்கு முன் தென்ஆப்பிரிக்க அணியின் தலைவர் டிவில்லியர்ஸ் 166 இன்னிங்சிகளில் இந்த சாதனையை படைத்தார்.

ஆனால் விராட் கோஹ்லி 161 இன்னிங்சிகளிலே இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

மேலும், இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோஹ்லி ஒருநாள் போட்டியில் தனது 24வது சதத்தை எடுத்தார்.

அவர் 117 பந்தில் 117 ஓட்டங்கள் (7 பவுண்டரி, 2 சிக்சர்) குவித்து ஆட்டமிழ்ந்தார்.

LEAVE A REPLY