சாதனை படைத்தது நாசாவின் சோலார் விண்கலம்!

0
310

வியாழன் கிரகத்தை ஆய்வு செய்யும் நோக்கில் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் அனுப்பப்பட்ட Juno எனும் சோலர் விண்கலம் புதிய சாதனை ஒன்றினை படைத்துள்ளது.

அதாவது இதுவரை விண்வெளிக்கு அனுப்பப்பட்ட சோலர் மின்சக்தியில் இயங்கும் விண்கலங்களிலேயே அதிக தூரம் பயணம் செய்த விண்கலம் என்ற சாதனையே அதுவாகும்.

இதன்படி சூரியனிலிருந்து சுமார் 793 கிலோமீற்றர்கள் தூரத்தை தாண்டி பயணம் செய்ததன் மூலம் இச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலுள்ள தூரத்தினைப் போன்று 5 மடங்கு தூரத்தில் உள்ள வியாழக் கிரகத்தை அடைவதற்கு குறித்த விண்கலத்தில் 500 வாற்ஸ் மின்சக்தியை வெளிவிடக்கூடிய சோலார் பேனல் பொருத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY