சுருக்கெழுத்து எனும் கலை அழிந்துபோகிறதா?

0
190

மிகவும் விரைவாகவும் துல்லியமாகவும் குறிப்பெடுப்பதற்கு, 2000 ஆண்டுகளுக்கும் அதிகமாக, மக்கள் சுருக்கெழுத்தை பயன்படுத்தி வந்துள்ளனர்.

ஆனாலும், தொழில்நுட்ப முன்னேற்றம், சுருக்கெழுத்திற்கு சாவு மணி அடித்து விடுமோ என்ற கவலை, பரவலாக எழுந்துள்ளது.

தகவல்களை மிகவிரைவாக குறித்துக்கொள்ள பயன்படுத்தப்படும் இந்த முறை, பண்டைய ரோமானிய பேரரசிடமிருந்து வந்துள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தேர்ச்சி பெற்ற வல்லுனர்கள், நிமிடத்திற்கு 200 க்கும் அதிகமான சொற்களை குறிப்பெடுத்துக் கொள்ள இந்த கலை வழிசெய்கிறது.

மின்னணு தொழில்நுட்பத்துடன் குரலை பதிவு செய்வது, மற்றும் நிகழ்வுகளை ட்டுவீட் செய்யும் இந்தக் யுகத்தில், சுருக்கெழுத்திற்கான தேவை குறைந்து, அதன் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது.

ஆனாலும் சில சில தொழில்துறைகளில் சுருக்கெழுத்துக்கு இன்னம் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது.

பத்திரிரைக்துறை முதல் நீதித்துறை வரை, சுருக்கெழுத்தின் அவசியம் இன்றும் உள்ளது என்று, வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இருந்தபோதிலும் கடந்த 10 ஆண்டுகளில் சுருக்கெழுத்து கலையை கற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கை, பெரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ளதாக, பிரித்தானியாவில் தொழில்முறை கல்வியை வழங்கும் ‘சிட்டி அன்ட் கில்ட்ஸ்’ தெரிவித்துள்ளது.

புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய வகையில் குரலை பதிவு செய்து அதனை மீண்டும் கேட்டு தட்டச்சு செய்து கொள்வதை விட சுருக்கெழுத்து முறைமூலம் சேகரித்த தகவல்களை தட்டச்சு செய்து கொள்வது மூன்று தடவைகள் விரைவானதாகும் என பிரிட்டனில் உள்ள சொல்லுக்கு சொல் மொழி பெயர்ப்பவர்களின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வணிக தொழில்துறையில் சுருக்கெழுத்து ஒரு தொழில்தகமையாக உள்ளதுடன் காலத்தின் தேவைக்கு ஏற்ப புதிய தொழில்நுட்பங்கள் வந்தாலும் சுருக்கெழுத்து என்ற பாராம்பரிய கலை அதன் தேவையை என்றுமே இழந்துவிடாது என்ற கருதை வல்லுனர்கள் எடுத்துக் கூறுகின்றனர்.

LEAVE A REPLY