ஹம்பாந்தோட்டை முஸ்லிம் குடும்பங்களுக்கு அமைச்சர் சஜித் உதவிக்கரம்

0
294

Minister Sajithஹம்பாந்தோட்டை கடலோரப் பகுதிகளில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட சில முஸ்லிம் குடும்பங்கள் இதுவரை வீடோ காணியோ வழங்கப்படவில்லையென முறையிட்டதை அடுத்து அவா்கள் வாழும் பிரதேசத்திற்கு நேரடியாகச் சென்ற அமைச்சா் சஜித் பிரேமதாச, அவா்களது பிரச்சினைகளை கேட்டறிந்தாா்.

அத்துடன் வீடு காணிகள் பெற்றுக் கொள்ளாதவா்களுக்கு 10 பேர்ச் காணியும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 2 இலட்சத்தி 50 ஆயிரம் ரூபாவில் நிர்மாணித்துக் கொடுக்கப்படும் வீடமைப்புத் திட்டங்களில் இவா்களுக்கும் வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை வேண்டிக் கொண்டாா்.

அத்துடன் கடந்த பாராளுமன்றத் தோ்தலின் போது ஹம்பாந்தோட்டை வாழ் முஸ்லிம்கள் தமக்கு வாக்களித்திருந்தமையிட்டும் அம்மக்களுக்கு நன்றி தெரவித்தாா்.

கடந்த மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு மதரீதியான குழப்பங்களை விளைவித்ததை ஞாபகப்படுத்தினாா். இந்த ஆட்சியில் அவ்வாறன பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும் அமைச்சா் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தாா்.

(அஷ்ரப் ஏ. சமத்)

Ashraff A Samad 1 2 12

LEAVE A REPLY