அமைச்சர் ராஜித சேனாரத்ன பொத்துவில் வைத்தியசாலைக்கு விஜயம்

0
267

DSC07258பிரதி சுகாதார அமைச்சர் பைசால் காசீமின் வேண்டுகோலுக்கிணங்க சுகாதார மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று (16) பொத்துவில் வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.

பிரதியமைச்சரின் வேண்டுகோளுக்கினங்க இவ் வைத்தியசாலைக்கு 3 மாடி வாட் பிரிவு, சிறுநீர் சிகிச்சை பிரிவு, அவசர விபத்து சிகிச்சை பிரிவு என்பன உடனடியாக அமைப்பதற்கு இவ் வருடத்தில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார்.

இவ் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் மிக விரைவில் நிறைவுபெறும் என அங்கு சமூகமளித்திருந்த பொத்துவில் வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கம், வைத்தியர்களிடத்தில் பிரதியமைச்சரும் அமைச்சர் ராஜித்த சேனாரத்தினவும் உறுதியளித்தனர்.

(அஷ்ரப் ஏ. சமத்)

DSC07242 DSC07264 DSC07274 DSC07289

LEAVE A REPLY