கஞ்சா வைத்திருந்த இளைஞர்கள் மூவர் ஏறாவூர் பொலிஸ் பிரிவில் கைது

0
239

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்திவெளி மற்றும் சத்தாம் ஹுஸைன் கிராமம் ஆகிய இடங்களில் கஞ்சா வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்திவெளிக் கிராமத்தைச் சேர்ந்த 18 வயதான இருவரிடமிருந்து முறையே 4700 மில்லி கிராம், 3690 மில்லி கிராம் ஆகிய அளவுகளில் கஞ்சா மீட்கப்பட்டதோடு குறித்த இளைஞர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை, ஏறாவூர் சத்தாம் ஹுஸைன் கிராமத்தைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவரிடமிருந்து 3140 மில்லி கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதோடு அந்த இளைஞரும் கைது செய்யப்பட்டார்.

பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததன் பேரில் இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன என்று தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினர்.

(அப்துல்லாஹ்)

LEAVE A REPLY