ஏறாவூர் ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலை சிறார்களின் விடுகை விழாவும், பரிசளிப்பு நிகழ்வும்

0
246

சனிக்கிழமை ஏறாவூர் அல்-ஜிப்ரியா வித்தியாலய கேட்போர்கூடத்தில் கோலாகலமாக நடைபெற்றது. ஓய்வு பெற்ற அதிபர் ஏ. ஜூனைட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னால் சுகாதார அமைச்சரும், தற்போதைய மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ் சுபையிர் பிரதம அதிதியாகவும், ஏறாவூர் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் கே. றமீஸா கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது பாலர் பாடசாலை குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்ட சிறார்களின் கலை நிகழ்ச்சிகள் பல அரங்கேற்றப்பட்டதுடன் அதிதிகளினால் பாலர் பாடசாலை சிறார்களுக்கு நினைவுச் சின்னங்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிரினால் பாலர் பாடசாலைக்கு மடி கணணி ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

றியாஸ் ஆதம்

0ee2023b-75fa-4787-bc27-16b6add67aa2 26ec2155-0501-452f-9761-c864d543688e 81f29d49-55dc-4f46-842f-22247ec4e722 1772553f-7ccb-40bf-a469-37ea3fcbab89 ba2cf567-16d2-4565-b90a-78c8965b250c

LEAVE A REPLY