குழந்தைகள் திருமண தடை சட்டம் இஸ்லாத்திற்கு எதிரானது என பாராளுமன்றத்தில் கைவிடபட்டது

0
345

பாகிஸ்தானில் குழந்தைகள் திருமண தடை சட்டம் கொண்டுவந்தால் அது இஸ்லாத்திற்கு எதிரானது இழிவுபடுத்தும் செயலாகும் என இஸ்லாமிய சபை கூறி உள்ளது. இதை தொடர்ந்து குழந்தைகள் திருமண தடை சட்டம் நிராகரிக்கபட்டது.

பாகிஸ்தானில் 18 வயதிற்குள்ளாகவே பெண்களுக்கு குழந்தை வயதிலேயே நடக்கும் திருமணம் அதிகரித்து வருகிறது.நாட்டில் 21 சதவீத பெண்கள் தங்கள் குழந்தை பருவத்திலேயே திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர்.

இதை தொடர்ந்து குழந்தைகள் திருமண கட்டுப்பாடு மசோதா 2014 அதாவது பெண்கள் அனுமதிக்கபட்ட வயதுக்கு குழந்தைகள் திருமணம் செய்து கொண்டால் கடுமையான தண்டனை விதிக்கும் சட்டம் கொண்டுவர முடிவு செய்யபட்டது இச்சட்டத்தின் படி திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் வயது 16 வயதில் இருந்து 18 வயதாக உயர்த்தப்பட்டது. அதற்கு முன் திருமண்ம் செய்பவர்களுக்கு 2 வருட கடுங்காவல் தண்டனை விதிக்க சட்டம் இயற்ற முடிவு செய்யபட்டது. ஆனால் தேசிய சட்டமன்ற நிலைக்குழு மத அலுவலகள் குழு இது இஸ்லாத்துக்கு எதிரானது என கூறியதை அடுத்து அந்த மசோதா கைவிடபட்டு உள்ளது.

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் பாராளுமன்ற உறுப்பினர் மர்வி மேமன் பாராளுமன்ற கீழவையில் குழந்தைகள் திருமண தடை சட்டத்தை தாக்கல் செய்தார்.எனினும் மசோதா ஷரியா சட்டத்திற்கு ஏற்ப இல்லை என இஸ்லாமிய சித்தாந்த கவுன்சில் கூறியதை தொடர்ந்து மேமன் அந்த மசோதாவை திரும்ப பெற்று கொண்டார்.

LEAVE A REPLY