சோமாலியாவில் ராணுவ தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்: 65 வீரர்கள் சாவு

0
253

சோமாலியாவின் தலைநகர் மொகாடிசுவில் இருந்து 550 கி.மீ. தொலைவில் கென்யா எல்லையில் சீல் கேடே என்ற இடத்தில் ராணுவ தளம் உள்ளது. அங்கு நேற்று அல்கொய்தாவின் கிளையான அல்ஷபாப் தீவிரவாதிகள் புகுந்தனர்.

முன்னதாக வாயில் முன்பு தற்கொலை தாக்குதல் நடத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி செய்தனர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உள்ளே பகுந்து துப்பாக்கி சூடும், வெடிகுண்டு தாக்குதலும் நடத்தினர்.

அங்கு பாதுகாப்பு பணியில் ஆப்பிரிக்க யூனியனை சேர்ந்த ‘அமிசம்’ என்ற படைப்பிரிவினர் இருந்தனர். அவர்களும் பதிலுக்கு தாக்குதல் நடத்தினர்.

எதிர்பாராத இத்தாக்குதலில் ‘அமிசம்’ படையில் இருந்த 65 கென்யா வீரர்கள் பலியாகினர். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். அதைத் தொடர்ந்து சோமாலியாவின் ராணுவ தளத்தை தீவிரவாதிகள் கைப்பற்றினர்.

மேலும் சீல் கடே நகரமும் அவர்களது வசமானது. மேலும் ராணுவத்துக்கு சொந்தமான 30 லாரிகளும், ஆயுதம் ஏற்றி சென்ற வாகனங்களையும் தீவிரவாதிகள் கைப்பற்றினர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

(MM)

LEAVE A REPLY