காத்தான்குடி மீடியா போரத்திற்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் இடையிலான சந்திப்பு

0
355

DSC_0018காத்தான்குடி மீடியா போரத்திற்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் இடையிலான சந்திப்பொன்று சீ.பி. காசிம் வீதியிலுள்ள NFGG காரியாலயத்தில் அதன் தவிசாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான் தலைமையில் இடம்பெற்றது.

காத்தான்குடி வைத்தியசாலை தொடர்பாக காத்தான்குடி மீடியா போரம் மேற்கொள்ளும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக இச்சந்திப்பு இடம்பெற்றதுடன் வைத்தியசாலையிலுள்ள குறைபாடுகள் அதனை எவ்வாறான முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வது என்ற விரிவான கலந்துரையாடல் இங்கு இடம்பெற்றது.

தேசிய கண் வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம். றிபாஸ், கடந்த காலத்தில் காத்தான்குடி வைத்தியசாலையில் மேற்கொண்ட முன்னெடுப்புக்கள், அதன் தற்போதைய நிலை, தன்னால் இதற்காக மேற்கொள்ளவுள்ள எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும், ஏன் காத்தான்குடி வைத்தியசாலையை தற்போது மக்கள் குறைவாக பயன்படுத்துகின்றனர் எனவும், எமது அமைப்பினால் வைத்தியசாலை முன்னேற்றத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

மேற்படி கலந்துரையாடலில் முன்னாள் நகர சபை உறுப்பினர் ஏ.ஜீ.எம். ஹாறூன், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் செயலாளர் எம்.ஏ.சி.எம். ஜவாஹிர் எம். ஹில்மி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வைத்தியசாலை தொடர்பாக மீடியா போரம் ஊடக பணிக்கப்பால் இவ்வாறான வேலைத்திட்டத்தினை முன்கொண்டு வருகின்றமை குறித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர்கள் பாராட்டுத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

(எம்.எச்.எம். அன்வர்)

DSC_0011 DSC_0013 DSC00420 DSC00428

LEAVE A REPLY