பர்கினா பாசோவில் அல்-காய்தா தாக்குதல்: 20 பேர் பலி

0
200

ஆப்பிரிக்க நாடான பர்கினா பாசோவில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் அல்-காய்தா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் பலியாகினர். மேலும் பலரை தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.

சம்பவம் குறித்து அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஆல்பா பேரி கூறும்போது, “பர்கினா பாசோவில் உள்ள ஸ்ப்லெண்டிட் விடுதிக்கு வெளிநாட்டவர் அதிகம் வருவர். இந்த விடுதியை குறிவைத்தே அல்-காய்தா பயங்கரவாதிகள் தாக்கியுள்ளனர்.

விடுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்துள்ளனர். காயமடைந்தவர்கள் விடுதியில் இருந்து பத்திரமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

பர்கினா பாசோவில் உள்ள பிரெஞ்சு படைகளிடம் உதவி கோரப்பட்டுள்ளது” என்றார்.

பர்கினா பாசோவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது இதுவே முதன்முறை. கடந்த ஆண்டு நவம்பரில் மாலி நாட்டில் இதேபோல் வெளிநாட்டவர் அதிகம் வரும் நட்சத்திர விடுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் சீனா, அமெரிக்கா, ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என 20 பேர் பலியாகினர்.

ஒகுடுகே பல்கலைக்கழக மருத்துவமனையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பெற்றுவரும் ஐரோப்பிய பெண்மணி ஒருவர், பயங்கரவாதிகள் வெள்ளைக்காரர்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகக் கூறினார்.

63 பிணைக் கைதிகள் மீட்பு:

தீவிரவாதிகள் பிடியில் உள்ள விடுதியில் இருந்து 63 பிணைக் கைதிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY