மொகமது ஹபீஸ், ஷாகித் அப்ரிடி அதிரடி: நியூசிலாந்து அணியை வீழ்த்தியது பாகிஸ்தான்

0
400

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நியூசிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. பாகிஸ்தான் அணியில் ஐந்தாண்டு தடைக்குப்பின் களமிறங்கிய மொகமது ஆமிர் ஆடும் லெவனில் இடம்பெற்றார்.

தொடக்க வீரர்களாக மொகமது ஹபீஸ், அகமது ஷேசாத் ஆகியோர் களம் இறங்கினார்கள். ஷேசாத் 16 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்து வந்த சோயிப் மெக்சூட் டக்-அவுட் ஆக வெளியேறினார்.

பின்னர் சோயிப் மாலிக் 20 ஓட்டங்களும், உமர் அக்மல் 24 ஓட்டங்களும் எடுத்தனர். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஹபீஸ் 47 பந்தில் 61 ஓட்டங்கள் (8 பவுண்டரி, 2 சிக்சர்) குவித்தார்.

6வது வீரராக களமிறங்கிய ஷாகித் அப்ரிடி அதிரடியாக 8 பந்தி்ல் 23 ஓட்டங்கள் குவித்தார். இமாத் வாசிம் 18 ஓட்டங்கள் எடுத்தார்.

இதனால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்கள் குவித்தது. நியூசிலாந்து சார்பில் மில்னே 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் 172 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்க வீரர் குப்தில் (2) ஏமாற்றினார்.

பின்னர் அணித்தலைவர் வில்லியம்சன்- முன்றோ ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முன்றோ அதிரடியாக விளையாடி 27 பந்தில் 56 ஓட்டங்கள் (2 பவுண்டரி, 6 சிக்சர்கள்) குவித்தார்.

அதன்பின் வந்த ஆண்டர்சன் (0), எலியாட் (3), ரோஞ்சி (0), சான்ட்னர் (0) , ஆஸ்லே (1) சொற்ப ஓட்டங்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

நிலைத்து நின்று விளையாடிய வில்லியம்சனால் 70 ஓட்டங்கள் எடுக்க முடிந்ததே தவிர அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.

நியூசிலாந்து அணி சரியாக 20 ஓவர்கள் முடிவில் 155 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

இதனால் பாகிஸ்தான் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 1-0 என முன்னிலையில் உள்ளது.

பாகிஸ்தான் அணி சார்பில் மொகமது ஆமிர், அமாத் வாசிம் தலா 1 விக்கெட்டும், உமர் குல், அப்ரிடி தலா 2 விக்கெட்டும், வஹாப் ரியாஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

LEAVE A REPLY