இந்தியாவில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் கைது!

0
234

உச்ச நீதிமன்ற தடையால் ‘ஜல்லிக் கட்டை நடத்த மாட்டோம்’ என ஜல்லிக்கட்டு கமிட்டி நிர்வாகிகளிடம் போலீஸ் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் எழுதி வாங்கினர். மீறி காளைகளை வாடிவாசல் உட்பட பொது இடங்களுக்கு அழைத்து வந்தால் கைது செய்யவும் போலீ ஸார் தயாராகி வருகின்றனர்.

உச்ச நீதிமன்ற தடையால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஜன.15-ல் அவனியாபுரம், ஜன.16-ல் பாலமேடு, ஜன.17-ல் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். மத்திய அரசு அனுமதியளித்து பிறப்பித்த உத்தர வால் வாடிவாசல், பார்வையாளர் மேடை அமைப்பது உட்பட பல பணி கள் அதிகாரிகள் முன்னிலையில் தீவிரமாக நடந்தன. உச்ச நீதிமன்ற தடையால் அனைத்து பணிகளும் உடனே நிறுத்தப்பட்டன. ஜல்லிக் கட்டு நடைபெறும் பகுதிகளில் 3 நாட்களாக மறியல், உண்ணா விரதம், கடையடைப்பு என தொடர் போராட்டங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இதற்கு போலீஸார் அனுமதி பெறாதபோதும், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அனு மதி அளிக்கப்பட்டது. பொதுமக்க ளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், வன்முறைக்கு இடமின்றி அமைதியான வழியில் போராட்டம் நடந்து வருகிறது.

பொங்கல் தினமான இன்று ஜல்லிக்கட்டு நடக்க வேண்டிய அவனியாபுரத்தில் நேற்றிரவே 300 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஜல்லிக்கட்டு காளைகள் வரலாம் என சந்தே கிக்கப்படும் தெருக்கள், மதுரை, திருப்பரங்குன்றம் சாலைகளில் ஏராளமான போலீஸார் நிறுத்தப்பட் டனர். ஜல்லிக்கட்டு நடத்த மாட்டோம் என கமிட்டி நிர்வாகிகளிடம் எழுதி வாங்கப்பட்டது.

இது குறித்து கமிட்டி செயலர் ராமசாமி கூறும்போது, ‘நீதிமன்ற தடையால் ஜல்லிக்கட்டை நடத்த மாட்டோம் என வருவாய்த் துறையினர், போலீஸார் உறுதிமொழி பத்திரமாக எழுதி வாங்கிவிட்டனர். அரசுதான் ஜல்லிக்கட்டை நடத்தி தருகிறது. அரசின் ஆதரவும், நீதிமன்ற அனுமதியும் இருந்தால் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த முடியும். நீதிக்கு கட்டுப்பட்டு காளைகளை எங்கும் வெளியே அழைத்துச் செல்ல மாட்டோம். அரசுக்கு முழுமையாக ஒத்துழைப்போம்’ என்றார்.

கைது செய்யத் திட்டம்

பாதுகாப்பையும் மீறி யாராவது ஜல்லிக்கட்டு காளைகளை தெருக் கள் வழியாகவோ, வாகனங்களில் ஏற்றி வாடிவாசல் அருகிலோ கொண்டுவர முயன்றால் அவர் களை தடுத்து திருப்பி அனுப்ப போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள் ளது. மீறினால் காளைகளுடன் கைது செய்யவும் போலீஸார் தயாராகி வருகின்றனர்.

மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு கிராமங்களில் இன்றுமுதல் 1,500 போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்று இரவு முதல் அலங்காநல் லூர், பாலமேடு மற்றும் சுற்றுப் பகுதிகள் போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படுகின்றன.

ஜல்லிக்கட்டு நடக்கும் ஊர்கள் மட்டுமின்றி, வழக்கமாக காளைகள் கொண்டுவரப்படும் 50-க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமங்கள் முழுவதிலும் போலீஸார் நிறுத்தப் படுகின்றனர். அனைத்து சாலை கள், தெரு சந்திப்புகளில் போலீ ஸார் தடுப்புகளை அமைத்து பாது காப்பில் ஈடுபட உத்தரவிடப்பட் டுள்ளது. வாகன சோதனை தீவிரப் படுத்தப்படுகிறது. இது குறித்து மதுரை மாவட்ட எஸ்.பி. விஜ யேந்திர பிதாரி கூறும்போது, ‘ஜல்லிக்கட்டு நடக்கும் நாளில் மட்டுமே அந்தந்த பகுதிகளில் காளைகளை அவிழ்த்து விடுவர். இதனால் பாலமேட்டில் நாளை (ஜன.16), அலங்காநல்லூரில் ஜன.17-லிலும் பலத்த பாதுகாப்பு போடப்படும்.

இதற்காக வெளி மாவட்ட போலீஸார் ஏராளமானோர் வருகின்றனர். பாதுகாப்பு குறித்த முழு விவரம் நாளை தெரிவிக் கப்படும். உச்ச நீதிமன்ற உத்த ரவை மீறி காளைகளை பயன்படுத் தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

-TH-

LEAVE A REPLY