ஹவாய் தீவில் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதல்

0
210

ஹவாய் தீவுக்கூட்டங்கில் ஒன்று ஒயாஹூ. இதன் வடக்கு கடற்கரை பகுதியான ஹலெய்வா பகுதியில் அமெரிக்க கப்பற்படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் இரவு நேர பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. இந்த இரண்டு ஹெலிகாப்டரிலும் தலா ஆறு பேர் இருந்தனர்.

பயிற்சியில் ஈடுபட்ட இந்த இரண்டு ஹெலிகாப்டர்களும் திடீரென நேருக்கு நேர் மோதி வெடித்து சிதறின. இந்த விபத்து காரணமாக அதில் இருந்த 12 பேர் நிலைமை என்ன என்று தெரியவில்லை.

இந்த விபத்தை அமெரிக்க ராணுவ அலுவலகம் உறுதி செய்துள்ளார். கடற்கரை காவல்கடையினர் ஹெலிகாப்டரின் எரிந்த பாகத்தை மீட்டுள்ளனர். ஆனால், யாரையும் உயிருடன் காணவில்லை என்று கூறினார்கள். இதனால் அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

விபத்திற்கான முழுக்காரணம் தெரியவில்லை. ஆனால், விபத்து ஏற்பட்ட பகுதியல் மிதமான காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்ததாக வானிமை சேனல்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY