ஏஞ்சலோ மெத்தீயூஸை நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பாணை

0
267

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் ஏஞ்சலோ மெத்தீயூஸை எதிர்வரும் திங்கட்கிழமை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.கிரிக்கெட் சூதாட்டத்துடன் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தவே அவருக்கு இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

குசால் ஜனித் பெரேரா மற்றும் ரங்கன ஹேரத் ஆகிய சூதாட்டகார்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட பேரம் பேசியுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, அண்மையில் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார்.

ஹேரத் மற்றும் பெரேரா ஆகியோரும் இது சம்பந்தமாக வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு விசாரணைக்கு அழைத்துள்ளது.

LEAVE A REPLY