இரண்டாவது உதவி வாகனங்கள் சிரிய முற்றுகை நகருக்கு பயணம்

0
181

அரசு முற்றுகையில் உள்ள கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு சிரிய நகரான மதயாவுக்கு ஒரு வாரத்தில் இரண்டாவது உதவி வாகனத் தொடர் பயணித்துள்ளது. சுமார் 50 டிரக் வண்டிகள் நேற்று வியாழக்கிழமை தலைநகர் டமஸ்கஸிலிருந்து லெபனான் எல்லையை ஒட்டி இருக்கும் நகருக்கு பயணித்தது. மதயா நகரில் மக்கள் பட்டினியால் மரணித்து வருவதாக ஐ.நா. குறிப்பிடுகிறது.

இங்கு சுமார் 40,000 மக்கள் சிக்கியுள்ளனர். கடந்த ஆண்டு ஒக்டோபருக்கு பின்னர் கடந்த திங்கட்கிழமையே நகருக்கு உதவிப் பொருட்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதே காலத்தில் உதவிப் பொருட்களை ஏற்றிய லொர்ரி வண்டிகள் கிளர்ச்சியாளர்களின் முற்றுகையில் இருக்கும் அரச கட்டுப்பாட்டு கிராமங்களான போஹ் மற்றும் கெப்ரயாவுக்கு சென்றன.

மதயா நகருக்கு போசாக்கு பொருட்கள் மற்றும் மருந்துகள் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. முன்னதாக நகருக்கு உணவுப் பொருட்களை எடுத்துச் சென்ற ஐ.நா. அதிகாரிகள் அங்கு நிலைமை மோசமாக இருப்பதாக விபரித்திருந்தனர்.

இந்த நகரில் இருக்கும் மக்கள் உயிர்வாழ பூனை போன்ற மிருகங்கள் மற்றும் புற்களை உண்டு வருவதாக கூறப்பட்டிருந்தது. மதயா நகரம் கடந்த ஜுலை தொடக்கம் அரச படை மற்றும் அதற்கு ஆதரவான லெபனான் ஷியா குழுவான ஹிஸ்புல்லாஹ்வின் முற்றுகையில் இருந்து வருகிறது.

LEAVE A REPLY