சீனா பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பலி

0
228

சீனாவில் அண்மைக்காலமாக பட்டாசு ஆலை தீ விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று அங்குள்ள பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் 5 பேர் பலியாகினர். மேலும் 7 பேர் படுகாயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவின் ஹூணன் மாகாணத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் நேற்று திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

படுகாயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சட்டவிரோதமான வெடிபொருட்களை தயாரிக்கும் ஆலையில் வெடிவிபத்து நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY