KCDAக்கு முதலமைச்சரின் நிதியொதுக்கீட்டில் உபகரணங்கள் கையளிப்பு

0
68

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத்தொகுதியில் அமைந்துள்ள கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்திற்கு மிக நீண்டகாலத் தேவைப்பாடாகக் காணப்பட்டுவந்த அலுவலக உபகரணங்கள் கணனி மற்றும் தளபாடங்கள் என்பன கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் கௌரவ Z.A. நஸீர் அஹமட் (Eng) 2015ஆம் ஆண்டிற்கான பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியொதுக்கீட்டிலிருந்து வழங்கி வைக்கப்பட்டது.

பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு 2016.01.14ஆந்திகதி வியாழக்கிழமை ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தில் வைத்து முதலமைச்சரின் சார்பாக ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் பதவிநிலை உதவியாளர் ஜனாப். ஏ.எஸ். ஜெமீல் மற்றும் முகாமைத்துவ உதவியாளர் எஸ். சுபைதீன் ஆகியோரினால் கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் செயலாளர் ஜனாப். எம்.ரீ. ஹைதர் அலி, உப தலைவர் ஏ.ஜே.எம். லாபிர் மற்றும் உறுப்பினர் ஜனாப். ஏ.எல்.எம். சியாஸ் ஆகியோரிடம் கையளிக்கப்ட்டது.

LEAVE A REPLY