வறிய தமிழ்,முஸ்லிம் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

0
223

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிகரம் கிராமத்தில் சிறப்பாக இங்கிவரும் சிகரம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீலங்கா கப்பல் ஆலிம் பவுண்டேஷனின் அனுசரனையுடன் நடைபெற்ற வறிய தமிழ்,முஸ்லிம் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் சிகரம் வீட்டுத்துத் தொகுதியிலுள்ள கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

சிகரம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் எம்.வை.ஆதம் ஜேபி தலைமையில் இடம்பெற்ற மேற்படி வறிய தமிழ்,முஸ்லிம் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக ஆரையம்பதி பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் கலந்து கொண்டார்.

இதன் அதிதிகளினால் வறிய தமிழ்,முஸ்லிம் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் நான்கு குர்ஆன் மத்ரசாக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு குர்ஆன் பிரதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா கப்பல் ஆலிம் பவுண்டேஷனின் பணிப்பாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி),ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் பிரான்சிஸ் அல் மேடா,ஆரையம்பதி பிரதேச சபையின் செயலாளர் திருமதி.சீ.ஜெ.அருட்பிரகாசம்,ஆரையம்பதி நீர் வலங்கள் வடிகாலமைப்பு சபையின் பொறியியலாளர் கே.எம்.எம்.சமட்,ஆரையம்பதி பிரதேச செயலகத்தின் பிறப்பு,இறப்பு,விவாகப் பதிவாளர் ரமனி லக்சுமிகாந்தன், ஆரையப்பதி மத்தியஸ்த சபையின் முன்னாள் தலைவர் எஸ்.ராமசந்திரன் உட்பட ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திக்குழு,ஆரையப்பதி மத்தியஸ்த சபை ஆகியவற்றின் உறுப்பினர்கள், ஊர்பிரமுகர்கள், உலமாக்கள்,ஊடகவியலாளர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பழுலுல்லாஹ் பர்ஹான்

2372fd46-c209-4a34-a4f4-a41a39586517 a9ee4aae-99b2-4eba-b8e1-07e28024d383 b37b31e2-b526-40ea-8d91-a06482545018 e1634a98-dca3-4b25-bd37-df53016e9f50 f4dd5732-de1f-4c17-b1e7-6b910cdb067d f60e1fd4-4fd6-4dd8-88f2-9823fdba30da

LEAVE A REPLY