ஜகார்தா தாக்குதல்; 17 பேர் பலி; ஐ.எஸ். உரிமை கோரல்

0
364

இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் இன்று (14) இடம்பெற்ற அடுத்தடுத்த குண்டுவெடிப்பு மற்றும் தற்கொலைப் படைத் தாக்குதல்களில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதில் 5 தாக்குதல்தாரிகள், 5 காவல்துறை அதிகாரிகள் மற்றும் 7 பொதுமக்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல மணிநேரம் இடம்பெற்ற இத்தாக்குதலில் இரு தற்கொலைதாரிகள் தங்களது உடலில் கட்டி வைத்திருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தமை குறிப்பிடத்தக்கது.

இத்தாக்குதலை ஐ.எஸ் அமைப்பு நடாத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது ஒரு தீவிரவாதத்தின் அடையாளமாகும். இதில் உயிரிழந்தோருக்காக நாம் மன வருத்தமடைகின்றோம் என அந்நாட்டு ஜனாதிபதி ஜொகொ விடோடொ தெரிவித்துள்ளார்.

அத்துடன் இத்தாக்குதலை கண்டிப்பதாக தெரிவித்த அவர், நாட்டின் சமாதானத்தை சீர்குலைத்துள்ள இத்தாக்குதல் தீவிரவாதத்தை மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மாளிகை, ஐ.நா. அலுவலகம், பாரிய வர்த்தக கட்டடங்கள் நிறைந்த தம்ரின் வீதியை மையப்படுத்தியே இத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Thinakaran)

indonesia_jakarta_attack-1 indonesia_jakarta_attack-2 indonesia_jakarta_attack-3

LEAVE A REPLY