இந்தோனேஷியா தாக்குதல் சம்பவம்; இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

0
200

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்த்தாவில் இன்று காலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என்று இந்தோனேஷியாவிற்கான இலங்கைத் தூதுவர் தர்ஷன பெரேரா கூறியுள்ளார்.

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்த்தாவில் சுமார் 130 இலங்கையர்கள் வசிப்பதாகவும் அவர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக எந்த தகவலும் இதுவரை இல்லை என்றும் அவர் எமது செய்திப்பிரிவிடம் தெரிவித்தார்.

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்த்தாவில் இன்று காலை 6 குண்டு வெடிப்பு சம்பவங்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

ஜகர்த்தாவில் இன்று பல்வேறு இடங்களில் குண்டு வெடித்த சத்தம் கேட்டதாக சம்பத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வௌியிடப்பட்டுள்ளது.

6 குண்டுகள் வெடித்ததில் ஜகார்த்தாவின் முக்கியமான பகுதியானது பெரிதும் சேதம் அடைந்து உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனினும் மூன்று குண்டுகள் மாத்திரமே வெடித்துள்ளதாக உள்நாட்டு ஊடக செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

-AD-

LEAVE A REPLY