வக்பு சொத்து முறைகேடுகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்; வக்பு சபைக்கு அமைச்சர் ஹலீம் பணிப்பு

0
270

நாட்­டி­லுள்ள அனைத்துப் பள்­ளி­வா­சல்­களின் சொத்­து­க்களையும் முறை­யாக அடை­யா­ள­மிட்டு அவற்றை நிர்­வ­கிக்­கு­மாறும் பள்­ளி­வாசல் சொத்­துக்­களை முறை­யற்ற வகையில் பயன்­ப­டுத்தும் நிர்­வா­கி­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்கும் படியும் முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் வக்பு சபையை பணித்­துள்ளார்.

இத­ன­டிப்­ப­டையில் வக்பு சபை பள்­ளி­வாசல் சொத்­து­களை முறை­யற்ற வகையில் பயன்­ப­டுத்தும் சொத்­துகள் மூலம் கிடைக்க வேண்­டிய வரு­மா­னத்தை குறைத்து செலுத்தும் பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­களை இனம் காணு­வ­தற்குத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் வக்பு சபை கவனம் செலுத்­தி­யுள்­ள­தா­கவும் விரைவில் இது தொடர்­பான ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தா­கவும் வக்பு சபைத் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம்.யாசீன் தெரி­வித்தார்.

வக்பு சபைத் தலைவர் பள்­ளி­வாசல் சொத்­துகள் தொடர்பில் ‘விடி­வெள்ளி’ க்குக் கருத்து தெரி­விக்­கையில்,

‘நாட்­டி­லுள்ள பல பள்­ளி­வா­சல்­களின் பதிவு செய்­யப்­பட்ட சொத்­துக்கள் பற்றி தேடிப் பார்க்க வேண்­டி­யுள்­ளது.

அநேக பள்­ளி­வா­சல்­களின் வக்பு செய்­யப்­பட்ட சொத்­துகள் தனிப்­பட்­ட­வர்­களால் பரி­பா­லிக்­கப்­பட்டு வரு­வ­தாக முறை­ப்பா­டுகள் கிடைத்­துள்­ளன.

கொழும்பு உட்­பட பல நக­ரங்­க­ளி­லுள்ள பள்­ளி­வாசல் சொத்­துக்கள் வக்பு சட்­டத்­துக்கு பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. பள்­ளி­வாசல் நிர்­வா­கி­களின் அனு­ச­ர­ணை­யுடன் மிகக் குறை­வான வாடகை செலுத்­தப்­பட்டு வரு­கின்­றன.

பல­வ­ரு­டங்­க­ளாக ஹரா­மான முறையில் பள்­ளி­வாசல் சொத்­துக்­களை சிலர் அனு­ப­வித்து வரு­கி­றார்கள்.

இவை பற்றி ஆராய்ந்து முறை­யான விசா­ர­ணைகள் நடத்தி பள்ளி வாசல் சொத்­துக்கள் முறை­யாக பரி­பா­லிக்­கப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புகள் ஏற்­ப­டுத்திக் கொடுக்­கப்­ப­ட­வுள்­ளன.

பள்­ளி­வா­சல்­களில் ஜன­நா­யகம் பேணப்­பட வேண்டும். படித்த இளை­ஞர்கள் நிர்­வா­கத்­துக்குள் உள்­வாங்­கப்­பட வேண்டும். அப்­போது சொத்­துக்கள் பரி­பா­லிப்­பதில் முன்­னேற்­றங்கள் ஏற்­ப­டலாம்.

வக்பு சொத்­துகள் முறை­யாக பரி­பா­லிக்­கப்­ப­டு­கி­றதா? அச்­சொத்­துகள் சமூ­கத்­துக்கு பயன்­ப­டு­கி­றதா? சரி­யான வரு­மானம் கிடைக்கப் பெறு­கின்­றதா? போன்ற விட­யங்கள் ஆரா­யப்­ப­ட­வுள்­ளன.

விஷே­ட­மாக மேலும் ஒரு விட­யத்தை வக்பு சபை பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­க­ளுக்குத் தெரி­விக்க விரும்புகிறது. பள்ளிவாசல் பிரச்சினைகளை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்ல வேண்டாம்.

பொலிஸ் நிலையத்துக்குச் செல்வதால் பிரச்சினை மேலும் பூதாகரமாகிவிடுகின்றது. அதனால் பள்ளிவாசல் பிரச்சினைகள் தங்களுக்குள்ளேயே தீர்த்துக் கொள்ளப்பட வேண்டும்’ என்றார்.

(Vidivelli)

LEAVE A REPLY