துறைமுக நுழைவுக்கட்டண அதிகரிப்புக்கு எதிராக வால்ஃப் கிலார்க் (Whalf Clerk) ஆர்ப்பாட்டம்.

0
290

துறைமுக நுழைவுக்கட்டணம் திடீரென 4000 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத்தெரிவித்து வாப்பு இலிகிதர்கள் அமைதிப்போராட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

வாப்ப இலிகிதர்களுக்கான துறைமுக நுழைவுக்கட்டணம் ரூபா 280 ரூபாவிலிருந்து 11778 ரூபாவாக அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த அமைதிப்போராட்டம் இடம்பெற்றிருக்கிறது.

அன்றாடம் துறைமுக வளவுக்குள் சுங்க வாப்பு தொழிலில் ஈடுபட்டவரும் வாப்பு இலிகிதர்கள் தமது நேரத்தில் பெரும்பகுதியை அங்கேயே செலவிட்டு வருகின்றார்கள் ஆனால் அங்கு சுத்தமான நீர் இரவு நேர உணவு தற்காலிக
ஓவறை, மலசலகூட வசதி உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. இவை தொடர்பாக துறைமுக நிர்வாகத்தை பலமுறை தெளிவூட்டியும் எந்தப்பயனும் இல்லை. எனவேதான் இந்த அமைதிப்போராட்டத்தை முன்னெடுத்ததாக இவர்கள் தெரிவித்தார்கள்.

இதனை ஒன்றிணைந்த சுங்க வாப்பு இலிகிதர்கள் மற்றும் போக்குவரத்து துறை ஊழியர்களை பாதுகாக்கும் அமைப்பு ஏற்பாடு செய்திருக்கிறது.

அஹமட் இர்ஸாட்

LEAVE A REPLY