இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் சகோதரர் கைது

0
332

இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் சகோதரர் ஹசீப், போலீசாரை தாக்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பசுவதை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது போலீசாருடன் கைகலப்பில் ஈடுபட்ட ஹசீப் போலீசாரின் சட்டையை கிழித்ததாக கூறப்படுகிறது. போலீசார் மீது தாக்கியதாக முகமது ஷமியின் சகோதரர் ஹசீப் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் ஹசீப் மற்றும் சில பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயத்தில் சிக்கியுள்ளார். நேற்று முன்தினம் 20 ஓவர் கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்திற்கு முன்பாக இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முகமது ஷமிக்கு இடது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. பரிசோதனையில் காயம் குணமடைய 4 முதல் 6 வாரங்கள் ஆகும் என்று தெரியவந்துள்ளது. இதனால் ஆஸ்திரேலிய தொடரில் இருந்து முகமது ஷமி விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY