முதலையிடம் சிக்கி ஒருவர் உயிரிழப்பு: களுதாவளையில் சம்பவம்

0
322

மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாகவுள்ள தீர்த்தக் குளத்தில் நீராடிய ஒருவர் முதலையின் பிடியில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

சுயம்புலிங்கப் பிள்ளையார் கோவிலுக்கு இன்று வியாழக்கிழமை வந்த மண்டூர் தம்பலவத்தையைச் சேர்ந்த தொழில்நுட்ப உத்தியோகஸ்தரான கிருஷ்ணபிள்ளை மாதவன் (வயது 31) என்பவர் குளத்தில் நீராடியபோது இந்த அசம்பாவிதத்துக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

(TM)

LEAVE A REPLY