மீரா பாலிகாவில் முதலாம் தர வித்தியாரம்ப நிகழ்வு!

0
1774

காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையின் 2016 ம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப நிகழ்வு இன்று (14) காலை 9.30 மணிக்கு கல்லூரி மைதானத்தில் மிக விமரிசையாக அதிபர் எம்.சீ.எம். சத்தார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேசக் கல்விப் பணிப்பாளர் பதூர்தீன், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஆரம்பக் கல்விப் பணிப்பாளர் இப்ராஹிம் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு செயலாளர் சமட், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் இவ்வருடம் தரம் ஒன்றிற்கு 157 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Kattankudy Meera Balika 14.01.2016 a Kattankudy Meera Balika 14.01.2016 b Kattankudy Meera Balika 14.01.2016 c Kattankudy Meera Balika 14.01.2016 e

LEAVE A REPLY