(Poem) பிறந்து பார்!

0
147

exam writeபிறந்து பார்

உன்னைச் சுற்றி
உறவு வட்டம் தோன்றும்.
உனக்கும் கவி படிப்பார்.
உணர்வுகளின் ஆழம் விளங்கும்.
உன்னைப் பார்த்தே
உம்மாக்கு கண் வலிக்கும்.

பிறந்து பார்

சாணையை நனைப்பாய்
பத்துத் தடவை
பால் குடிப்பாய்.
காக்கை போன்று
இருந்தாலும்
கொக்கே என்று
கொஞ்சுவார்.
தாய், தந்தை
தனயன், தமக்கை
எல்லாமே உனக்காக
இறைவன் அனுப்பிய
எடுபிடி ஆக்கள்
என்பாய்.

பிறந்து பார்

உன் கால்கள்
ஒரு சொட்டு
உதைக்கும் போதிலும்
பிஞ்சு விரல்
பிடவையைப்
பிடிக்கும் போதிலும்
நெஞ்சம் நேசத்தால் துள்ளும்.
பாசம் கவலைகளை வெல்லும்.

பிறந்து பார்

ஒன்றும் பேசாமலே
உறவுகளை
உன் கட்டுப் பாட்டில்
உள் வாங்க முடியுமே.
கீச்சு அழுகையால்
ஆச்சரியம் தருவதை
அவதானித்ததுண்டா?
கண்ணால் சிரிப்பதால்
பன்னாள் பகைகள்
தன்னால் ஒழிவதை
உன்னால் காண வேண்டுமா

பிறந்து பார்

சின்னச் சின்ன அழுகைகளால்
செல்லம் காட்ட முடியுமே.
அதற்காக வேணும்,
எல்லோரையும் கிறுக்கும்
எசமானாக ஆகலாம்
அதற்காக வேணும்,
அழுகையால்
சந்தோசம் தரவும்
பார்வையால்
பாசம் தரவும் முடியுமே
அதற்காக வேணும்

பிறந்து பார்

உன்
நிகழ்காலம்
நிச்சயமற்று இருந்தாலும்
எதிர்காலம்
இருளாய் இருந்தாலும்
பிறந்து பார்.

இன்பம்
துன்பம்
இரண்டும்
இறைவனின் கைகளில்

பிள்ளை பெறுவதற்கு
பின் நிற்கும்
பெற்றோர்கள்
படித்துப் பார்க்கட்டும்

பிறந்து பார்

(Mohamed Nizous)

LEAVE A REPLY