பய­ணித்த விமா­னத்தின் சக்­கரப் பகு­தியில் 11 மணி நேர­மாக தொங்­கிய சடலம்

0
310

பிரே­சி­லி­லி­ருந்து பிரான்ஸின் பாரிஸ் நக­ருக்கு பய­ணித்த விமா­ன­ மொன்றின் சக்­கரப் பகு­தி­ யில் தொங்­கிய நிலையில் நப­ரொ­ரு­வ­ரது சடலம் மீட்­கப்­பட்­டுள்­ளது.

திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற இந்த சம்­பவம் குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் புதன்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்ளன.

பிரே­சிலின் சாயோ போலோ நக­ரி­லி­ருந்து மேற்­படி எயார் பிரான்ஸ் விமானம் புறப்­பட்ட போது, குறிப்­பிட்ட நபர் ஐரோப்­பா­வுக்கு சட்­ட­விரோ­த­மாக செல்லும் முயற்­சியில் அந்த விமா­னத்தின் சக்­கரப் பகு­தியில் மறைந்து கொண்­டி­ருந்­தி­ருக்­கலாம் எனவும் அவர் அந்தப் பய­ணத்தின் ஆரம்­பத்­தி­லேயே மர­ண­ம­டைந்­தி­ருக்­கலாம் எனவும் நம்­பப்­ப­டு­கி­றது.

அவ­ரது சடலம் அந்த போயிங் 777 விமா­னத்தில் தொடர்ந்து 11 மணி நேரம் தொங்கிக் கொண்­டி­ருந்­துள்­ளது.

LEAVE A REPLY